Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2015 ஜனவரி 29 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை (28) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிப்பட்டுள்ளதாவது,
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் கோரும் தீர்மானத்தின்படி, இலங்கை மக்களின் சமாதான வாழ்வை உறுதிப்படுத்தும் பொருட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதியையும் வடமாகாண சபை கோருகின்றது.
தங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த சட்டத்தை நீக்குமாறு வேண்டுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025