2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உண்மை விதை வெங்காயச் செய்கை வெற்றி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

உண்மை விதை மூலமான வெங்காயச் செய்கை, யாழ். மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளதாக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'இலங்கை முழுவதும் உண்மை விதை மூலம் விளைச்சலை பெறும் வெங்காயச் செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெங்காயத்தின் பூக்களில் விதைகள் உருவாகி அவற்றை விதையாக பெற்றுக்கொள்வதே உண்மை விதை எனப்படுகின்றது.

இம்முறை யாழ்.மாவட்டத்தின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்றதாக உள்ளதா? என ஆராய்வதற்காக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டது  இது வெற்றியளித்ததை அடுத்து, சுமார் 100 விவசாயிகள் இந்த வெங்காயச் செய்கையை மேற்கொண்டுள்ளார்கள்' என்றார்.  

கலப்பு தன்மை அற்ற இந்த வகை வெங்காயங்களில் இருந்து 75 நாட்களில் விதையை பெற்றுக்கொள்ள முடியும். நோய்த்தன்மை குறைந்த நோய் எதிர்ப்பு தன்மையுள்ள வெங்காயத்தின் இயல்புகொண்டு ஓரளவு பருமன் உடைய இந்த வெங்காயம் பார்வைக்கு அழகாகவும் உள்ளது.

உண்மை விதை மூலம் வெங்காயச் செய்கையை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படாது. இந்த விதைகள் யாழ்.மாவட்டத்திலுள்ள விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை என்பதால் அவர்களுக்கு இந்த உண்மை விதைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .