2021 மே 06, வியாழக்கிழமை

கல்வி ஆய்வு நூலகம் திறந்து வைப்பு

George   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்


பேராசிரியர் மா.சின்னத்தம்பியால் உருவாக்கப்பட்ட எம்.எஸ்.எட்ஸ்பிறிங் (ஆளு நுனுளுPசுஐNபு) என்ற கல்வி ஆய்வு நூலகம் திருநெல்வேலியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனால் செவ்வாய்க்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் காரைக்குடியிலுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்த கற்கை நெறிகளை எம்.எஸ்.எட்ஸ்பிரிங் முன்னெடுத்து வருகின்றது. கல்வியில் முதுகலைமாணிக் கற்கையை இங்கு நூற்றுக்கணக்கானோர் பயில்கின்றனர்.

அதனடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி சேகரித்த கல்வியியல் சார்ந்த நூல்கள் இருக்கின்றன.

யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அ.பஞ்சலிங்கம், யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயலஷ்மி இராசநாயகம், விரிவுரையாளர் எம்.சத்தியகுமார், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், திருநெல்வேலி மக்கள் வங்கி முகாமையாளர் க.சத்தியமூர்த்தி, கூட்டுறவாளர் எஸ்.கனகசபாபதி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .