2021 மே 06, வியாழக்கிழமை

திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 05 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டடத்திறப்பு விழாவில் சுகயீனம் காரணமாகவே தான் கலந்துகொள்ளவில்லையென பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.ரவீந்திரதாஸன் தெரிவித்தார்.

புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 3 மாடி கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை (05) நடைபெற்றபோது, அந்நிகழ்வுக்கு சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்தப் பிரதேச சபையில் 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ஆளுங்கட்சியின் 10 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்களே விழாவில் கலந்துகொண்டதுடன், மிகுதி உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொள்ளாமைக்குரிய காரணத்தை தவிசாளரிடம் அறியமுடியாமல் இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .