Princiya Dixci / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
ஆலயமொன்றின் தேர் திருவிழாவுக்குச் சென்று காணாமற்போன எனது மகன் பற்றிய தகவல்கள் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளதாக தாய் ஒருவர் தெரிவித்தார்.
காணாற்போன மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவரே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
எனது மகன் பத்மநாதன் சுதர்சன் (வயது 20) சாவகச்சேரி துர்க்கையம்மன் ஆலய தேர்த் திருவிழாவுக்கு 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சென்ற போது, அப்பகுதி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் மகன் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் 2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வெளியான செய்தி குறிப்பொன்றில் மகனின் பெயர் விபரம் இருந்தது.
பின்னர் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தொடரும் காணாமற்போனோர் விசாரணை அழைக்கப்பட்டவர்களில் எனது மகன் பெயர், விபரம் பற்றிய தகவல் இருந்தது. பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது மகன் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பண்டாரவளையிலிருந்த தடுப்பு முகாம் கடந்த 2001ஆம் ஆண்டுப் பகுதியில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் எனது மகனை அந்த முகாமில் கண்டதாக முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.
அதன் பின்னர், அந்த முகாம் பற்றி அறிந்து அங்கு சென்று விசாரித்த போது எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என அந்த தாய் கூறினார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago