2021 மே 18, செவ்வாய்க்கிழமை

10 வருடங்களில் கல்வியில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவோம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்


கல்வியில் இன்னும் 10 வருடங்களில் பாரிய புரட்சியை ஏற்படுத்திக்காட்டுவோம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.


சக்கோட்டை புனித சவேரியார் முன்பள்ளியில், முன்பள்ளி தலைவர் திருமதி கோமளா ஸ்ரான்லியின் தலைமையில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,


இந்த கல்வி புரட்சியில் முக்கியமாக வடமராட்சி மண் பெரும் பங்காற்றும். ஏனெனில் உயர்தரப் பெறுபேறுகளில் முன்னிலை இடங்களைப் பெறுபவர்கள் வடமராட்சி மண்ணை சேந்தவர்களாக இருக்கின்றனர்.


கல்வி என்றால் வடமராட்சி மண்ணைத்தான் சொல்வார்கள். இங்குள்ள பிரபல பாடசாலைகளில் சிங்கள பகுதிகளில் இருந்து வந்து கல்விகற்று சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த சிறார்கள் தாமாகவே கல்வியின் நவீனத்துவத்தை உணர்ந்து சாதனை படைப்பார்கள்' என்று கூறினார்.


இந்நிகழ்வில் கலந்தகொண்ட 45 சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கியதுடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான நூல்களையும் வழங்கி, முன்பள்ளியின் வளச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .