2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணி உற்பத்தி ஆரம்பம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைத்தார்.

சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதணிகளின் உற்பத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், சந்தைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல், மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற தேவைகளுக்கென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 3.45 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றால் வட்டு கிழக்கு மாதர் அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் 14 பெண்களுக்கு பாதணி உற்பத்தி தொடர்பான முழுமையான பயிற்சிகள் கடந்த ஒருமாத காலமாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே, இப்போது உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மனதைக் கவரும் பலவித வண்ணங்களிலும், பல அளவுகளிலும் உருவாக்கப்படும் இறப்பர் பாதணிகளுக்கு 'ஏஆர்பீ' (ARP - Anthiran Rubber Products) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும் ஏஆர்பீ பாதணிகள் விரைவில் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .