Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்து சட்டவிரோதமான முறையில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவரை, வெள்ளிக்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுலா.டி.சில்வா தெரிவித்தார்.
மேற்படி நபர் பண்டத்தரிப்பு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாகவும் இவ்வாறு கைதானவர் தமிழ்நாடு, மதுரையை சேர்ந்த செட்டியார் கறுப்பையா (வயது 42) என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரிடம் இருந்து 20 சல்வார், 10 புடவைகளும் மீட்கப்பட்டுள்ளது. கைதான புடவை வியாபாரியை மல்லாகம் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
16 minute ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
03 Jan 2026