2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் காயமடைந்த புலம்பெயர் நாட்டவர் மரணம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமராட்சி, மந்திகைப் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (04) உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த தர்மலிங்கம் கோபிநாத் (வயது 32) என்பவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதவான் அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .