2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்றவர் கைது

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த உரிமையாளரை வியாழக்கிழமை (06) கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கடைக்குச் சென்ற இரகசிய பொலிஸார், சிகரெட் வாங்குவது போல் பாவனை செய்து கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 94 சிகரெட்டுக்களையும் பொலிஸார் இதன் போது மீட்டுள்ளனர். கைதான கடை உரிமையாளரை மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .