Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள சிறுபோக நெல், நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோக செய்கைகளில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவடைந்து வரும் நிலையில், நெல்லுக்கான சரியான சந்தை வாய்ப்பு இன்மையால் தாங்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக நெற்செய்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கும் போது, ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் நெல்லைக் கொள்வனவு செய்;வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி, கண்டாவளை, முழங்காவில் ஆகிய பகுதிகளில் உள்ள நெற்களஞ்சியசாலைகளில், நெல் சந்தைப்படுத்தும் சபையினால் நெற்கொள்வனவுகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் தலா இரண்டாயிரம் கிலோகிராம் வீதம், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாய்க்கும், சிகப்பு நாடு நெல் ஒரு கிலோகிராம் 45 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்;பட்டு வருவதுடன் அதற்குரிய பணத்;தினை உரிய முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்;ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026