2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

எலிகடித்த சிசுவின் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் முகத்தை எலிகள் கடித்ததால் அச்சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.

உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குப் பிறந்த சிசுவொன்று, பிறந்த மறுநாளே உயிரிழந்துள்ளது. இந்த சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போதே, அங்கிருந்த எலிகள், சடலத்தின் முகத்தை கடித்துக் குதறியுள்ளன.

இருப்பினும், குறித்த சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், அதன்பின்னர் அச்சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், சிசுவின் சடலம் அவலமான நிலையில் இருந்ததை அவதானித்த பெற்றோர்கள் அச்சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலை செலவிலேயே சடலத்தை அடக்கம் செய்வதற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி அனுமதி வழங்கினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .