2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

செல்வச்சந்நிதி ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற 'அன்னதானக் கந்தன்' என்று அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை (14) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

23ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும், 24ஆம் திகதி கைலாச வாகனத்திருவிழாவும், 27 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி தீர்த்திருவிழாவும் இடம்பெற்று, தீர்த்தத் திருவிழா அன்று மாலை இடம்பெறும் மௌனத் திருவிழாவுடன் மஹோற்சவம் நிறைவடைகின்றது.

தினமும் காலை 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் மஹோற்சவ பூசைகள் இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகம், வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .