2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

10 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, பொலிகண்டி பகுதியில் 10 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை இளவாலை பொலிஸாரும் வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை, இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இராஜலிங்கம் அஜந்தன் என இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா தெரிவித்தார்.

இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.றஞ்சித் மாசிங்கவின் வழிகாட்டலில் வல்வெட்டித்துறை பகுதிக்குச் சென்ற மஞ்சுல டி.சில்வா தலமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர், அரிசிக்குள் மறைத்து அதனை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 25 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .