Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்று புதன்கிழமை (19) 2 1/2 பவுண் நகை திருடப்பட்டுள்ளதுடன், திருடியவர்களில் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், நேற்று புதன்கிழமை (19) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதன்போது ஆலயத்துக்கு வந்திருந்த பெண்ணின் நகைகளை புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் திருடியுள்ளார்.
திருடிய பெண்ணை பொலிஸார் ஆலய வளாகத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்துக்கு வருகை தரும் அடியார்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை தவிர்க்குமாறும் தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025