2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

யாழில். சட்டவிரோத மின் பாவனையாளர்களிடமிருந்து இழப்பிட்டுத் தொகையாக 2,24,17,603 ரூபா அறவீடு

Kogilavani   / 2011 நவம்பர் 29 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில். குடாநாட்டில் சட்டவிரோத மின் பாவனையாளர்களிடமிருந்து இழப்பிட்டு தொகையாக 2 கோடியே 24 இலட்சத்தி 17 ஆயிரத்தி 603 ரூபாய் கிடைத்திருப்பதாக இலங்கை மினசார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் இன்று செய்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

யாழில். கடந்த சனிக்கிழமை முதல் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணிவரை  126 சட்ட விரோத மின் பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் எனவும் இவர்களிடம் இருந்து யாழ்.பிராந்திய மின்சார சபைக்கு 2,24,17,603 ரூபாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டவிரோத மின்பாவனையாளர் ஒருவரிடமிருந்து அதிகூடிய இழப்பிட்டுப் பணமாக 10  லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் விசேட மின் பரிசோதனையாளர் குழுவினரும் யாழ். பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே 126 சட்டவிரோத மின் பாவனையாளர்கள் பிடிப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • neethan Wednesday, 30 November 2011 04:49 AM

    பத்து இலட்சம் மின்சார கட்டண நிலுவை வைத்திருந்தவர் சாதாரண ஆளாக இருக்க முடியாதே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .