Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
கஞ்சா விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு பருத்தித்துறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ்மகாதேவா மூன்று மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
பருத்தித்துறை சந்தைப் பகுதியில் உள்ள சைக்கிள் திருத்தும் கடை ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பருத்தித்துறை வராத்துப்பளையைச் சேர்ந்த அன்டனி என்பவர் பருத்தித்துறை சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி யூ. நிஷாந்த தலைமையிலான குழுவினர் கைதுசெய்தனர்.
குறித்த சந்தேக நபர் பருத்தித்துறை நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு மூன்று மாதங்களுக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago