2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மதவாச்சி வாகன விபத்தில் 3 வயது குழந்தையும் தாயும் பலி; நால்வர் காயம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரொமேஸ் மதுசங்க)

ஏ – 9 வீதியின் மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துச் சம்பவங்களில் 3 வயது குழந்தையொன்றும் அதன் தாயும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை, அதன் பின்னால் பயணித்த வான் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தையும் அதன் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்துக்கு காரணமான வான் அவ்விடத்தில் நிறுத்தப்படாது தப்பிச் சென்ற போதிலும் பொலிஸார் அதனை மடக்கிப் பிடித்து சாரதியைக் கைது செய்துள்ளனர்.

மேற்படி விபத்துக்குள்ளான மூவரும் வீதியில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ள தனியார் பஸ் ஒன்று அவ்விடத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பின்தொடர்ந்து வந்துள்ள லொறியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் லொறியின் சாரதி உட்பட மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பொலிஸார் மேற்படி விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .