2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'இனங்களுக்கிடையே சிறந்த தொடர்பாடலின்மையே 30 வருடகால பிரச்சினைக்கு காரணம்'

Kogilavani   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
வடகிழக்கில் கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் இனங்களுக்கிடையில் நல்லதோர் தொடர்பாடலின்மையே என தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்தார்.

யாழ். பிராந்திய டெலிகொம் அலுவலகத்தை இன்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இன்று நல்லதோர் தொடர்பாடல் இருந்து வருகின்றது. இந்த நிலை கடந்த 30 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருக்குமானால் நாட்டில் இனப்பிரச்சினையென்ற ஒன்று இருந்திருக்காது. அதேபோல நாட்டில் பாரிய அழிவுகளும் ஏற்பட்டிருக்காதெனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.

ஐ.ஸ்ரீலங்கா செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மக்களுக்கு அதிவேக இணைய வசதி இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.
இத்திறப்பு விழா நிகழ்வில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறைவேற்று அதிகாரி கிரீட் யங், ஸ்ரீலங்கா ரெலிகொம் தலைவர் நிமால் வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .