Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை அரச பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தொகை மதிப்பு பத்திரம், குடும்பத் தலைவர் பட்டியல் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த 31 வருடகால இடைவெளியின் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்தப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் 4ஆம் 5ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து வருகை தரவுள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்களினால் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 04ஆம் திகதி நெடுந்தீவு, ஊர்காவற்துறை, காரைநகர் உதவி அரசாங்க அதிபர் அலுவலங்கள் வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச செயலக கிராம அலுவலர்களுக்கும் எதிர்வரும் 05ஆம் திகதி மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் தெல்லிப்பளை, சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலக கிராம அலுவலர்களுக்கும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
23 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago