2021 மே 06, வியாழக்கிழமை

36ஆவது ஆண்டு நினைவேந்தல்

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில்,  யாழ். பொது நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ். பொது நூலகம் எரித்து அழிக்கப்படே போது, உயிரிழந்த நான்கு பேருக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றப்பட்டது.

1981ஆம் ஆண்டு, ​ஜுன் மாதம் முதலாம் திகதி இரவு யாழ். பொதுநூலகம் தீவைக்கப்பட்டபோது, அங்கு காணப்பட்ட பெறுமதியான பல்லாயிரக்கணக்கான புத்தங்கள் எரிந்து நாசமடைந்தன.

பொதுநூலகம் தீவைக்கப்பட்டபோது அதற்கு வெளியில் இருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நான்கு ஊழியர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா,  வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் உபதலைவர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உப தலைவர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .