2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஆமையைக் கொண்டு சென்றோருக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(கண்ணன்)

கொடிகாமத்தில் இருந்து புன்னாலைக்கட்டுவனுக்கு ஆமை ஒன்றைக் கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொடிகாமத்தில் இருந்து ஆமை ஒன்றுடன் சென்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 4 பேரை சாவகச்சேரிப் பொலிஸார் கனகன்புளியடிச் சந்தியில் நடத்திய சோதனையின் போது கைதுசெய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா, சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

குறித்த ஆமையை ஆற்றில் விடுமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--