2021 ஜனவரி 23, சனிக்கிழமை

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது   நிரூபிக்கப்படுமானால்  இவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (ஸ்ரீநாத் பிரசன்ன ஜயசூரிய)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .