2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பட்டதாரி பயிலுனர்கள் ஆட்சேர்ப்பில் 516 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 516 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வடமாகாண பிரதம செயலாளர் ரமேஷ் விஜயலக்சுமி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், விவசாயத் துறை பணிப்பாளர் ஸ்ரீபாலசுந்தரம், கமநல சேவைகள் திணைக்கள பணிப்பாளர் பற்றிக் நிரஞ்சன் உட்பட யாழ். மாவட்ட பிரதேச செலாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சுனாமி பேரலையினால் உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிற்கும் பட்டதாரி பயிலுனர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 'கிராமத்தின் வளர்ச்சிக்கு கிராம மட்டத்தின் அடிப்படையில் கிராமிய வளங்கள்' எனும் தொனிப்பொருளில் வரைபடங்கள் தயாரித்து மக்களின் அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் சேவை மனப்பாங்குடன் கடமையாற்ற வேண்டும்"  என்ற கோரிக்கை இதன்போது விடுக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .