2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 54,889 ஏக்கரில் நெற்செய்கை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச விதைநெல், உழவு இயந்திரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளதால், கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் 54,889 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.   

பிரதேச விவசாயிகளுக்கான விதைநெல் மற்றும் உழவு இயந்திரத்தை அரசாங்கம் இலவசமாக வழங்கி வருவதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்தது. அத்துடன், மானிய விலையில் உரமும் வழங்கப்படுகிறது.

அறுவடை செய்யப்படும் நெல்லைக் கொள்வனவூ செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரும்போகச் செய்கையில் கூடிய நிலப்பரப்பில் விவசாயிகள் நெல்; பயிரிட்டுள்ளனர். அடுத்த அறுவடையின்போது, கிளிநொச்சியில் அதிக விளைச்சல் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .