2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கும் 6 மாத கால சிறை

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் கஞ்சாவுடன் செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்ட இருவருக்கும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் புதன்கிழமை (02) உத்தரவிட்டார்.

மேற்படி நபர்களை, சுன்னாகம் பொலிஸார் புதன்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

அதேயிடத்தினைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மீட்கப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் செவ்வாய்கிழமை (02) சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரும் எனப்படும் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என சுன்னாகம் பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தமையினையடுத்தே, நீதவான் இருவருக்கும் 6 மாதங்களுக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .