Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 30 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் - கீரிமலைக்கிடையேயான 795ஆம் இலக்க வழித்தடத்திலான பஸ் சேவையை உடனடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம், இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த முப்பது வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த நிலையில், தற்போது மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள வித்தகபுரம் நகுலேஸ்வரம் உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களே இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
795ஆம் இலக்க பஸ் சேவையானது யாழ்ப்பாணத்திலிருந்து, தெல்லிப்பளை எட்டாம் கட்டை வீதியூடாக பன்னாலை வரை இடம்பெற்று வருகின்றது. இருப்பினும் வித்தகபுரம், நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளூடாக இவ் பஸ் சேவை இடம்பெறுவதில்லை.
மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மேற்படி 795ஆம் இலக்க பஸ் சேவையை வித்தகபுரம், நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளூடாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
20 minute ago
25 minute ago