2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

யாழில் நாளொன்றுக்கு 9 மணித்தியால மின்தடை

A.P.Mathan   / 2011 ஜூன் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாடு முழுவதும் இந்தவாரத்தில் மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை என்ற ரீதியில் நாளொன்றுக்கு 9 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் குடாநாடு இருளில் முடங்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்திருப்பதாகவும் யாழ். மின்பாவனையாளர்கள் கவலை வெளியீட்டுள்ளனர்.

மின் தடைப்படுவதற்கான காரணம் குறித்து யாழ். மின்சாரசபையின் பிரதம பொறியியலாளரிடம் வினவியபோது, 'மின் உற்பத்தி செய்யும் 'நொதன் பவர்' நிறுவனத்திற்கு உச்ச டீசல் கிடைக்காமையினால் மின் உற்பத்தி இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் கொழும்பில் இருந்து உச்ச டீசல் எடுத்து வரப்பட்டதும் மின் பாவனை வழமைக்கு திரும்பும்' எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டு மின் பாவனையின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதினால் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாமல் இருப்பதாகவும் மின் பாவனையாளர்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .