2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

"வடக்கு கிழக்கை பிரிக்கும் தீர்ப்பு உடனே அமுல் : உயர் பாதுகாப்பு வலய விவசாயம் தொடர்பான தீர்ப்பு அமுல

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

வடக்கு கிழக்கை பிரிக்கும் தீர்ப்பு உடனடியாக அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள  போதிலும் உயர் பாதுகாப்பு வலயத்தில் விவசாய நடவடிக்கைகளில் அந்தப் பகுதியில் இருப்பவர்களை  ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு கூட இன்று வரை நடைமுறைப் படுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது என நல்லிணக்க ஆணைக்குழு முன் அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனணக்குழ நேற்று வெள்ளிக்கிழமை வலி வடக்கு தெல்லிப்பளை மற்றும் வலி தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களிடம்  தமது விசாரணைகளை மேற்கொண்டது.

காலையில் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளிக்க நூற்றுக் கணக்கானவர்கள் வந்து இருந்த போதிலும் சிலர் மட்டும் சாட்சியமளித்தார்கள்
 
சுமார் இருபது பேர் வரை சாட்சியமளித்ததுடன் ஏனையவர்களின் முறைப்பாடுகள் எழுத்து மூலம் ஆணைக்குழுவினால் பெறப்பட்டன. அதிக எண்ணிக்கையானவர்கள் கடத்தப்பட்டவர்கள்,  காணாமல் போனவாகள் மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் சாட்சியங்கள் அளித்தார்கள்.
 
வலி வடக்கு குடியேற்றம் சம்பந்தமாகவும் உயர் பாதுகாப்புவலயம் சம்பந்தமாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்து  தீர்ப்பினைப் பெற்றிருந்த ச.தங்கராசா சாட்சியமளிக்கும் போது
   
'கடந்த காலத்தில் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தமாகவும் அதேவேளை மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். அதற்கான தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கி இரண்டு வருடங்களாகப் போகின்றது

அதேகாலப் பகுதியில் வடக்கு கிழக்கு பிரிப்பு காரணமாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு,  தீர்ப்பும் கிட்டத்தட்ட அதே காலப் பகுதியில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.
 
ஆனாலும் கூட வடக்கு கிழக்கு பிரிப்பு உடனடியாக அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் உயர் பாதுகாப்பு வலயத்தில் விவசாய நடவடிக்கைகளில் அந்தப் பகுதியில் இருப்பவர்களை ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு கூட இன்று வரை நடைமுறைப் படுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது.

இதே போன்று இடம்பெயர்ந்த வேளையில் எமக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தான் இன்றும் வழங்கப்படுகின்றது. அன்று எமக்கு நிவாரணம் வழங்கப்பட்ட வேளையில் மாவின் விலை கிலோ 9 ரூபாவாக காணப்பட்டது.  இன்று மாவின் விலை 90 ரூபாவையும் கடந்துள்ளது.

இத்தகைய நிலையில் உரிய இடத்தில் தொழில் செய்ய அனுமதிக்கப்படாமலும் அதேவேளை உரிய நிவாரணம்கூட முழுமையாக வழங்கப்படாத நிலையிலும் வாழ்ந்து வருகிறோம்' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .