2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலியில் 2ஆம் மொழி கற்கை நிலையம் திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இந்து, பௌத்த, கலாசார பேராவையால், அச்சுவேலியில், இன்று (02), 2ஆம் மொழி கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கற்கை நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்துக் கலாசாரப் பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் விளங்கும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவடங்களிலும், இந்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையத்தில் சிங்களம், ஆங்கில மொழிக் கற்கைநெறிகளை, மாணவர்கள் இலவசமாகக் கற்கமுடியும்.

இதுவரை காலமும் குறித்த நிலையம் ஊடாக 15 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .