Niroshini / 2021 ஜனவரி 19 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும், வேலணை பிரதேச செயலகத்தை முடக்கி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில், 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை, கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில், நில அளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தால் செலவிடுவதை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும், வேலணைப் பிரதேச செயலகத்துக்கு பேரணியாகச் சென்றனர்.
இதன்போது வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர்.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாம் பிரதேச செயலாளரிடம் மனு கையளிக்க வேண்டும் என்றும் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி அளக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் பிரதேச செயலாளர் உறுதிமொழி வழங்க வேண்டும் என்று கோரியும் பிரதேச செயலரைச் சந்திக்க போவதாக கூறியிருந்தனர்.
இதையடுத்து, சிலர் செயலாளரை சந்தித்த சிலர், பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மீண்டும் காணிகளை சுவீகரிக்க முடியாது என்றும் காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்திருந்தனர்.
மேலும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
5 minute ago
34 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
38 minute ago
46 minute ago