Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
சிறுபான்மைச் சமூகம் சிதைவுற்றால், அது பெரும்பான்மையினருக்கு வேட்டையாக அமையுமென்றுத் தெரிவித்த கோப்பாய் ஆசிரியர் கலாசாலைப் பிரதி அதிபர் லலீசன், ஆகவே, தாம் சிதைவுறாது தமது உரிமைக்காக ஒருமித்து பயணிக்க வேண்டுமெனவும் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ர் வி. தர்மலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில், நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்த நாட்டில் தற்போது தேர்தல்கள் வரவிருக்கின்ற நிலையில், சிறுபான்மை மக்களின் வாக்கு தமக்கு பெற்றுக் கொள்வதற்காக பலரும் முனைவதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில், சிறுபான்மை மக்களைச் சிதைத்தும் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருதாகத் தெரிவித்த அவர், இந்த இடத்தில் தான் தங்களுடத்தே ஒற்றுமையும் நிதானமும் அவசியம் தேவைப்படுகிறதெனவும் கூறினார்.
இவ்வாறான நிலையில் தாம் ஒன்றாக இல்லை என்றால், தந்தை செல்வா சொன்னது போல கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
41 minute ago