Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் அரசியல்வாதிகளிடத்தே திட்டங்கள் இல்லாத கொள்கையே இருப்பதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா, அவர்கள் காகிதப் புலிகளை வைத்து அரசியல் செய்வதையே பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ர் வி. தர்மலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில், நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எவையும் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே இல்லையெனவும் தெரிவித்தார்.
நாட்டில் தேர்தல்கள் வரவிருக்கின்ற நிலையில், அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், மக்களுக்காக கட்சிகள் ஒற்றுமையாக இருந்து செயற்படுவதே சிறந்ததெனவும் கூறினார்.
அதே நேரத்தில், இருக்கின்றவர்களும் மக்களுக்காகச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
41 minute ago