Editorial / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதானவர்கள் எனவும்,இவர்கள் இன்றைய தினம் (11) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்-கொக்குவில் பகுதியில் ஆயுதங்களுடன் 6 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த 6 பேரும் மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி கூரிய ஆயுதத்தால் நடுவீதியில் கேக் ஒன்றினை வெட்ட முயற்சித்ததாகவும்,இதன்போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்,இவர்களுக்கும் ஆவா குழுவிற்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago