2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நியமனக் கடிதங்கள் வழங்கல்

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துரைத்த ஆளுநர், விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்டகால வெற்றிடம் நிரப்பப்படுவதாகவும்  யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களைவிட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ; அதற்கு விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார்.

மேலும்   உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இம்முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளதாகவும்  கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .