2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யாழில் பாராதியாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம், நல்லூர் அரசடியில் அமைந்துள்ள பாராதியாரின் உருவச்சிலைக்கு முன்னால், இன்று (11) காலை நடைபெற்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சலேட் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  மேலும் இதன்போது, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .