2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழில் 68மி.மி மழை வீழ்ச்சி

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என் .ராஜ்

யாழில், இன்று (11) 68 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்

'யாழ். மாவட்டத்தில், இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது.

'இன்று காலையிலிருந்து தற்போது வரை  யாழில் 68.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 24 மணித்தியாலங்களுக்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும்'  எனவும், அவர் தெரிவித்தார்.

குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு, தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .