2021 மார்ச் 03, புதன்கிழமை

யாழ். சந்தைகள் திறப்பு

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் யாவும், மக்கள் பயன்பாட்டுக்காக, இன்று (18) மீள திறக்கப்பட்டன.

கடந்த மாதம், யாழ்ப்பாண மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க, வடக்கு மாகாணத்தில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை, மருதனாரமடம் பொதுச் சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக, இன்று திறக்கப்பட்டுள்ளன.

சந்தைகளில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி, வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தைகளில் பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .