Editorial / 2019 நவம்பர் 08 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்குக்கு, வெளிநாட்டு உதவித்திட்டங்கைளை பெற்று, அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில் திகழும் மாகாணங்களாக, வடக்கு, கிழக்கை மாற்றியெடுப்பேன் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று (08), யாழ்ப்பாணடம் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழில் நல்லூர், வலிகாமம், காரைநகர், உள்ளிட்ட 15 பிரதேச செயலகங்களிலும் விசேடமாக ஒவ்வொரு தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று கூறிய அவர், அதேபோன்று, தொழில்நுட்ப மய்யம், தொழில்நுட்பப் பூங்கா என்பன அவற்றுடன் இணைத்து உருவாக்கப்படும் கூறினார்.
இதனூடாக இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வர் என்றும் சிறு கைத்தொழில் புரிகின்றவர்கள், பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கு அனைத்து உதவித் திட்டங்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026