2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

’வடக்கு வட்டமேசை’ கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

'வடக்கு வட்டமேசை’ கலந்துரையாடல், வடமாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், நாளை (19) பிற்பகல் 04 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுனரின் எண்ணக்கருவுக்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள், துறைசார் வல்லுனர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக, இம்முறை இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

"வடமாகாணத்தில் துடுப்பாட்ட அபிவிருத்தியும் தற்போதைய பின்னடைவுன்கான காரணங்களும்" எனும் தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

கருத்துகள் தெரிவிக்க ஆர்வமுள்ளோர், குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைக்கமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X