2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஸ்தலத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம், நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தொண்டமனாறு – கெருடாவில், வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அரவிந்தன் வயது(23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளினை ஓட்டி சென்ற இளைஞனான சுபாஸ்கரன் துவாரகன் வயது(23) என்ற இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற திருமண வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 10 மணிபோல் பிறிதொரு சக நண்பனை அவரது வீட்டில் வீடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சிறுப்பிட்டி துர்க்கை அம்மன் கோயில் பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிர்திசையில் இருந்து வந்த வாகனம் ஒன்று மத்தியகோட்டில் இருந்து விலகி இவர்களை மோதி தள்ளியுள்ளது. பின் இருக்கையில் இருந்து சென்ற  அரவிந்தன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

துவாரகன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளது. வீதியில் பொருத்தியுள்ள சீ.சீ.டிவி கமெராவின் உதவியுடன் தப்பி சென்ற வாகனத்தின் சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .