2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

11 பாரிய விபத்துக்கள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதத்திற்கிடைப்பட்ட முதலாம் காலாண்டில் 11 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த டி சில்வா செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த முதற்காலாண்டில் 11 பாரிய விபத்துக்களும் 24 நடுத்தர விபத்துக்களும், 38 சிறிய விபத்துக்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இந்த விபத்துக்களினால் 4 பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதே மாதிரியாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 12 பாரிய விபத்துக்களும் 30 நடுத்தர விபத்துக்களும் 60 சிறிய விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்துக்களினால் 40 பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

விபத்துக்களில் 40 வயது முதல் 65 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--