2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு மாற்ற ஆலோசனை

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு மாற்றுவது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா இது தொடர்பாக ஆராயவுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட  குறிப்பிட்ட விவசாய பீடமானது நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக யாழ்.திருநெல்வேலியில்  இயங்கிவந்தது.

இதனை மீண்டும் கிளிநொச்சிக்கு மாற்றுவது தொடர்பாக அமைச்சர், யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் விவசாயபீட பீடாதிபதி ஆகியோருடன் ஆராயவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .