2021 மார்ச் 03, புதன்கிழமை

ஜப்பானிய நிதியுதவியுடன் குளங்கள் புனரமைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

வலி.கிழக்குப் பகுதியில் உள்ள குளங்கள் ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படவுள்ளன.
 
புத்தூர் கிழக்கில் உள்ள குருநாதர்குளம், வழக்கம்பரைக்குளம், நுணுவில்குளம் என்பனவே இவ்வாறு தூர்வாரப்பட்டு, அகலமாக்கப்படவுள்ளன என்று வலி.கிழக்குப் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்ட பிரதேசங்களில் வலி.கிழக்கு மிகமுக்கியமானது. எனினும் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் கோடை காலங்களில் கடும் வரட்சி நிலவியது.

இப்பகுதியில் உள்ள குளங்கள் பராமரிப்பின்றியிருந்தமையால் மழைநீர் சேமிக்கப்படாமையாலேயே இவ்வாறு வழமைக்கு மாறாக வரட்சி ஏற்பட்டதாக விவசாயிகள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனால், வலிகிழக்கில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்தது.

தற்போது குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதால் வரட்சி நிலை நீங்கி, வலி. கிழக்கில் விவசாயநடவடிக்கைகள் வளம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .