Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். பொம்மைவெளிப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மழை காலங்களில் வெள்ளத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்துக்கு நேரடி விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த பின்னர் இதுகுறித்துத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ ஆகியோர் அமைச்சருடன் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஊடாக, விசேட திட்டம் ஒன்றை முன்வைத்து இந்த மக்களை உடனடியாக மேட்டு நிலப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து இப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago