2020 நவம்பர் 25, புதன்கிழமை

யாழில் சர்வதேச வர்த்தக சந்தை தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இம்மாதம் 3 நாட்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் 22ஆம் 23ஆம்  திகதிகளில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின்போது, துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல்கள்,; பங்களிப்போடு பயிற்சிகளும் முதலீடு சம்பந்தமான கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.

யாழ். பொதுநூலகத்தில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5.30 வரை வடமாகாணத்தில் வர்த்தகத்திற்கான சூழல் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும்  நாளைமறுதினம் சனிக்கிழமை  சிறிய நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான, சாத்தியமான முதலீட்டு வர்த்தக அபிவிருத்தி நிதிச்சேவைகள் தொடர்பாகவும் நிறுவனங்களின் கட்டமைப்பு முதலீடு சம்பந்தமான வரையறைகள் தொடர்பாகவும் 23ஆம்  திகதி உற்பத்திப் பொருட்களின் இறுதி நிலைகளும் பொதி செய்தல் முறைகள் போன்றவை நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் நாளை வெள்ளிக்கிழமை வருகைதந்து பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மற்றும் இந்தியன் வங்கிக் கிளையையும் திறந்து வைப்பதுடன், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களையும் வழங்கவுள்ளார். இந்தோனேசியாவின் உயர்ஸ்தானிகர் ஒருவரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக வருகை தரவுள்ளார். மேலும் யாழ். போதனா வைத்தியசாலையில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவதந்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வருகை தரவுள்ளார;


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .