2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வடக்கில் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கிலுள்ள பணியகங்கள் மூடப்பட்டாலும் அங்கு தமது செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென செஞ்சிலுவைக் குழுவின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியகங்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பணியகங்கள் மூடப்பட்ட பின்னரும் கொழும்பிலிருந்து அது தொடர்ந்தும் ஒருங்கிணைக்கப்படுமெனவும் கூறினார்.

வடக்கிலுள்ள பணியகங்கள் மூடப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் செஞ்சிலுவைக் குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெய்ப்பூர் உடல் உறுப்புகளை இழந்தோருக்கான புனர்வாழ்வு நிலையத்தின் பணிகளும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களைப் பார்வையிடச் செல்லும் அவர்களின் குடும்பத்தினருக்கான உதவிகளும் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் சரசி விஜேரட்ன குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .