2021 மார்ச் 06, சனிக்கிழமை

யாழ்.பொது நூலகத்திற்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்ரூபன்)

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வர்ணப்பூச்சு வேலைகளிற்காக வெளிநாட்டுப் பொது நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூபா 10 இலட்சம் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்று யாழ்.மாநகர சபைத் தலைவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்ததுடன், இதற்கான வேலைத் திட்டங்கள் அனைத்தும் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் யாழ்.மாநகர சபைக்கு இதுவரை காலமும் ஒரு மொழி பெயர்ப்பாளரே கடமையாற்றி வந்தார். தற்போது இது இரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,  எமது தீ அணைப்புப் பிரிவிற்கு புதிதாக 18பேர் உள்வாங்கப்பட்டதுடன் எமது ஆளணி தற்போது 1210 ஊழியர்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .