2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கல் வீச்சு தாக்குதலில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

இரு குழுக்களிடையே  இடம்பெற்ற  மோதலில்  விளக்குப் பிடிக்க  சென்ற தந்தையும்  , மகனும் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் முருகன் கோவில் வீதியில் இந்த சம்பவம்  இன்று மாலை 4.30 மணியளவில்; இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின் போது தந்தையும் மகனும் விளக்குப் பிடிக்க சென்றுள்ளனர். இதன்போது  ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்  சுமார் 25 பேர் கொண்ட குழவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த கல் வீச்சின் போது,கோப்பாய் முருகன் வீதுpயைச் சேர்ந்த கிரவேலு ரவிந்திரராசா (வயது 44) ரவிந்திரராசா ராஜ் மோகன் (வயது 25) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .