2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,-எஸ்.ரூபன்

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருதனார்மடம், சுன்னாகம், மானிப்பாய், இணுவில், சங்கானை ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளிலேயே முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இது தொடர்பில் பொதுமக்கள், யாழ் மாவட்ட  செயலகத்தில் தகவல் வழங்க முடியும் எனவும் இவ்வாறு தகவல் வழங்கும் பட்சத்தில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், யாழ். மாவட்டத்தில் பாவனைக்கு உதவாத  பொருட்களை விற்பனை செய்வது குறைவடைந்துள்ளது.  அவ்வாறே முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிப் பயன்பாட்டையும் தடுக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--